Tuesday, 19 July 2022

கள்ளக்குறிச்சி வன்முறை: மாவட்ட ஆட்சியர், எஸ்பி இடமாற்றம்

 கணியமூரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என் ஸ்ரீதர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் எஸ் செல்வகுமார் ஆகியோரை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி புதிய கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜாதவத்புதிய எஸ்பியாக சென்னை,திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் எஸ்.பகலவன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தின் திட்ட இயக்குனராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்மேலும் செல்வகுமார் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Monday, 18 July 2022

கலவரம் - ஆய்வு செய்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்










மாண்புமிகு முதல்வர் அவர்களின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டம்,  தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாகவும், பள்ளியின் சேதம் குறித்தும், அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வு செய்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தவறு யார் செய்திருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்

இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் - மு.க.ஸ்டாலின் வாக்குபதிவு

தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவைச் செயலகக் குழுக் கூட்ட அறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தலில் தனது வாக்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செலுத்தினார்

கள்ளக்குறிச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு

கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களை அருகேயுள்ள அரசு பள்ளியில் சேர்க்கலாமா என ஆலோசனை.இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

''தமிழ்நாடு திருநாள் ஜூலை - 18 " விழா

 இன்று ( 18.07.2022) மெரினா கடற்கரையில் , தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் " தமிழ்நாடு திருநாள் ஜூலை - 18 " விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை நீர்வளத் துறை அமைச்சர். துரை முருகன்,தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,செய்தித் துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் சைதை மு.மகேஷ்குமார் ஆகியோரிடம் பார்வையிட்டபோது.

Sunday, 17 July 2022

advertisement


 

புதிய கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 புதிய கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் இன்று முதல் திறக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் கரையோர மக்கள் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது
மேலும் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை வழியாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது
புதிய கொள்ளிடம் பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Saturday, 16 July 2022

புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார் அமைச்சர் கே என் நேரு

 திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், முக்கொம்பு, காவிரி இடதுகரை வாத்தலை கிராமத்திலிருந்து புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்திற்கு இன்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு தண்ணீர் திறந்து வைத்தார்.

இதன் மூலம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், அ.சௌந்தரபாண்டியன், சீ.கதிரவன், செ.ஸ்டாலின்குமார், ந.தியாகராஜன் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆகியோருடன் அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.